இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 22, 2009

வணக்கம்


கரமதை ஊன்றித் தவழவெண் பாவில்
சிரமதைத் தூக்கி வளர - வரும்பாவின்
சீர்தனை வெட்டித் தவறினைச் சுட்டி
உரமிட்டு வாழ்த்திடு வீர்

1 comment:

உமா said...

திரு.துரை அவர்களுக்கு, அற்புதம் தங்கள் வெண்பாக்கள். மிக மிக சிறப்பு. வாழ்த்துக்கள். ஒவ்வொன்றாக படித்து பின்னூட்டமிடுகிறேன். தங்களை http://venbaaeluthalaamvaanga.blogspot.com/ பதிவிற்கு வரவேற்கிறேன். தங்களின் வெண்பாக்களை அதிலிட்டால் என் போன்றோருக்கு வழிகாட்டியாக இருக்கும்.

//கரமது ஊன்றித் தவழவெண் பாவில்
சிரமதுத் தூக்கி வளர - வரும்பாவின்
சீர்தனை வெட்டி தவறினைச் சுட்டி
உரமிட்டு வாழ்த்து வீர் //

வாழ்த்/து - தேமா முன் நிரை வரவேண்டுமல்லவா
வாழ்த்திடு வீர் என் மாற்றிக்கொள்ளலாம்.

வெண்பா பதிவின் உரிமையாளை திரு.அகரம் அமுதாவும்[இயற்பெயர் சுதாகர்] திரு.தமிழநம்பி அவர்களும் சின்னத் தவறுகளளாய்க்கூட மிக அழகாக திருத்துவார்கள் என்பதால் அங்கு தங்களை வர வேண்டுகிறேன்.