
எல்லாம் அவள் :
27)
கொடியவள்; நாள்தோறும் என்மனம் கொல்வாள்;
இடையில்லாப் பூங்கொடிய வள்
28)
உறங்கிக் கிடந்தேன்; உலுக்கி அணைத்தாள்;
கிறக்கத்தில் இப்பொழுது நான்
30)
மின்னஞ்சல் வந்துவிழும் மின்னலவள் பேரோடு;
பொன்னூஞ்சல் ஏறும் மனது
வாழ்க உறவுகள் ...
என்னுள் தோன்றுவதை எளியக் குறள்வடிவில் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சின்னச் சின்னத் தலைப்புகளில் வகைப்படுத்த நினைத்திருக்கிறேன் ......
என்றாவது ஒருநாள் நல்லதொரு தொகுப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு
தங்கள் வாழ்த்துகளோடு வளமாய்ப் பெருகும் ’குறள்’ என்ற நம்பிக்கையுடனும் தொடர்கிறேன் ..
கடவுள் :
1)
பிறவாமை வந்தாலும் ஈன்றவனே; உன்னை
மறவாமை வாய்த்தால் இனிது
2)
எப்போ(து) அழைத்தாலும் வந்தென்பின் தப்பாது
நிற்பான் எனையாள் பவன்
...........தொடர வாய்ப்பளியுங்கள்