இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 27, 2009

திருக்குறளும் , என் குரலும் ...!

அதிகாரம் 9 : விருந்தோம்பல் :

விருந்தினர் காத்திருக்க நல்லமுதென் றாலும்
விருந்தோம்பா(து) உண்ணல் தவிர்ப்பீர் - ஒருவன்
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று
----------(8)

[ முதல்குறள் ஈற்று = தவிர் ; ஆசு = பீர் ]


முகமலர்ந்து நல்விருந்தோம் பும்வீட்டில் வாழ்வாள்
அகமலர்ந்து செல்வம கள்தான் - மகிழ்ந்தே
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்
---------------------(9)
[முதல்குறள் ஈற்று = கள் ; ஆசு = தான் ]


அதிகாரம் 10 : இனியவை கூறல் :

இனியசொற்கள் தேடியுரைப் போரின்பா வம்நீங்கி
புண்ணியம் கூடிச்சே ரும்பாராய் - என்றுமிங்கு
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
-------------------------(10)
[முதல்குறள் ஈற்று = ரும் ; ஆசு = பாராய் ]

No comments: