ஊரடங்கும் சாமத்தில் தூங்காமல் நானிருக்க
ஊரெல்லை யில்என(து) உள்ளம் தவமிருக்கு
ஆழத்துள் மூழ்கிவிட்ட அம்மிக் குழவியாய்
ஆழ்மனதுள் உன்நினைப் பு
கருவேல முள்ளொடிச்சுக் கள்ளிச் செடியில்
ஒருசேர நம்பேர ஒண்ணா எழுதிவச்சு
ஊரவிட்டுப் போகையில காத்திருன்னு சொன்னஉன்
வார்த்தையிலென் மூச்சிருக் கு
ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன்
ஊருணிப் பாறையில் ஒருத்தியாத் தானிருக்கேன்
ஊரெல்லாம் சாடைக்கு ஓரணியில் சேர்ந்திருக்கு
யாரென் நிலைசொல்வா ருனக்கு
சொத்தைப்பல் லுன்னுசொல்லி சும்மாப் புடுங்கியே
செத்தைக்குள் வீசுனியே சிங்கப்பல் ஒன்றையே
சொத்தைப்போல் எடுத்தெனது சட்டையில் சுத்தியே
மெத்தைக்குள் வச்சிருக் கேன்
ஊருவந்து தடுத்தாலும் உள்ளேநீ தானிருப்பாய்
யாருவந்து பிரிச்சாலும் என்னுள்நீ வாழ்ந்திருப்பாய்
உன்மூச்சுக் காற்றிலென் மூச்சுவாங் கும்வரைக்
கன்னியிருப் பாளிங்கேக் காத்து
என்றும் மறையாத என்மனச் சூரியனே
இன்றும் குறையாத என்குணச் சந்திரனே
காப்பாய் வடக்கைக் கரையாய் ; உனக்காகக்
காத்திருப்பேன் நான்கரையா மல்
கலங்காதே காத்திருக்குக் காலம் நமக்கு
துலங்காதே நீயில்லா(து) ஒன்றும் எனக்கு
காத்திருப்பாய் எல்லையை சாமியாய் நீயங்கு
காத்திருப்பேன் உன்னைநான் இங்கு
திருத்திய பதிவு :
[ நன்றி : சுபைர் ராமசாமி அய்யா அவர்கள் / சந்தவசந்தம்]
ஊரடங்கும் சாமத்தில் தூங்காமல் நானிருக்க
ஊரெல்லை யில்என(து) உள்ளம் தவமிருக்கு
ஆழத்துள் மூழ்கிவிட்ட அம்மிக் குழவியாய்
ஆழ்மனதுள் உன்நினைப் பு
கருவேல முள்ளொடிச்சுக் கள்ளிச் செடியில்
ஒருசேர நம்பேர ஒண்ணா எழுதிவச்சு
ஊரவிட்டுப் போகையில காத்திருன்னு சொன்னஉன்
வார்த்தையிலென் மூச்சிருக் கு
ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன்
ஊருணிப் பாறையின் மத்தியில் தானிருக்கேன்
ஊரெல்லாம் சாடைக்கு ஓரணியில் சேர்ந்திருக்கு
யாரெனைச் சொல்வா ருனக்கு
சொத்தைப்பல் லுன்னுசொல்லி சும்மாப் புடுங்கியே
செத்தைக்குள் வீசுனியே சிங்கப்பல் ஒன்றையே
சொத்தைப்போல் பொத்தியே சட்டையில் சுத்தியே
மெத்தைக்குள் வச்சிருக் கேன்
ஊரே தடுத்தாலும் உள்ளேநீ தானிருப்பாய்
யாரும் பிரிச்சாலும் என்னுள்நீ வாழ்ந்திருப்பாய்
உன்மூச்சுக் காற்றிலென் மூச்சுவாங் கும்வரைக்
கன்னியிருப் பாளிங்கேக் காத்து
என்றும் மறையாத என்மனச் சூரியனே
இன்றும் குறையாத என்குணச் சந்திரனே
காப்பாய் வடக்கைக் கரையாய் ; உனக்காகக்
காத்திருப்பேன் நான்கரையா மல்
கலங்காதே காத்திருக்குக் காலம் நமக்கு
துலங்காதே நீயில்லா(து) ஒன்றும் எனக்கிங்கு
காத்திருப்பாய் எல்லையை சாமியாய் நீயங்கு
காத்திருப்பேன் உன்னைநான் இங்கு
Tweet | |||||
No comments:
Post a Comment