101)
ஓருதவி செய்யா ஒருவனுக்குச் செய்யுதவிக்(கு)
ஈருலகும் ஈடாகா திங்குணர் - பாரினில்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது---------------------(11)
[முதல்குறள் ஈற்று = து ; ஆசு = இங்குணர்]
104)
கடுகளவு சிற்றுதவி; போற்றுவார் பெற்றோர்
பெரும்பனை யின்அள வுக்கு - வெறுமோர்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்-----------------------(12)
[முதல்குறள் ஈற்று = வுக்கு ; ஆசு = - ]
107)
துன்பம் துடைத்தநல் நட்பையே ஏழ்பிறப்பும்
நெஞ்சினில் கொள்வார்சான் றோர்பாரில் - என்றும்
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு-----------------(13)
[முதல்குறள் ஈற்று = றோர் ; ஆசு = பாரில் ]
Tweet | |||||
No comments:
Post a Comment