இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 12, 2009

திருக்குறளும் , என் குறளு(லு)ம் !

அன்பின் உள்ளங்களே ,

வெண்பாவில் (எனக்கு ) ஒரு புதிய முயற்சி.
ஒர் இருகுறள் வெண்பாவில் முதல் குறள் திருவள்ளுவரிடம் இருந்து பெற்று ,
தொடரும் குறளில் அதற்கு எளிமையாய் விளக்கம் தர முயன்றிருக்கிறேன் .

முதல் குறலின் ஈற்றுக்கும் ( ஓரசை எனில்) வரும் குறளின் முதலுக்கும் எப்படி தளை கொள்வது எனத் தெரியவில்லை.

ஆர்வக்கோளாரில் செய்திருக்கிறேன் ,
தவறெனில் சுட்டிக் காட்டுங்கள் .



அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து :

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
- பகலுக்கு
ஆதவனாம்; பூவுலகுக்(கு) ஆண்டவனாம்; பேசுகின்ற
வார்த்தைக்கு என்றும் தமிழ்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
- முற்றும்
அறிந்தோர்; கடவுள்தாள் ஏற்காதோர்; எல்லாம்
தெரிந்தும் தெரியா தவர்


அதிகாரம் 02 : வான் சிறப்பு :

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று
- வானிலிருந்(து)
மண்ணுயிரின் வாழ்வுயர மண்புகும் ; இவ்வுலகுக்(கு)
என்றும் அமுதாம் மழை


அதிகாரம் 10 : இனியவை கூறல் :

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்(து) அற்று
- இனிமேல்
எதனால் கலகம் உலகில்; அதனால்
இதமாகப் பேசிப் பழகு

No comments: