இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

May 29, 2016

பாட்டி வைத்தியம் - 2



721)
முன்நரை என்னும் குறைமறைந்து போய்விடும்
முள்முருங்கை உண்டுவரு வோர்க்கு


722)
நெல்லிக் கனிநான்கு நாளும்உண்; சொல்லிஇனி
நீளும்உன் வாழ்வுபிறர் முன்


723)
அருகம்புல் சாற்றின் அருமை அறிவாய்;
குருதியைச் சுத்தம்செய் வாய்


724)
அகத்துள் புழுவை அழிக்கும் அகத்தி;
அளவாய்ப் புசிக்கும் பொழுது


725)
வாழை இலைகொண்டு காயத்தைப் போர்த்து;
கொடும்தீயின் தாக்கத்தைப் போக்கு




2 comments:

நடராஜன் கல்பட்டு said...

பாட்டியோடு இணைந்திட்டார்
இரு வரிக்குறள் சொல்லறிஞர்
பாரினில் எவருளார் அளித்திட
மாற்றுக் கருத்தவர்க்கு

duraian said...

மிக நன்றி ஐயா :)