இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

May 3, 2016

வாய்ப்பு ...!681)
சிரித்துரைக்கும் போதுபொய் மெய்யாய்;மெய் பொய்யாய்
உருமாற உண்டாகும் வாய்ப்பு


682)
வரிசையில் வந்தவரை வாய்ப்பார்க்க வைத்துவிட்டு
வாரிசை வந்தடையும் வாய்ப்பு


683)
மிஞ்சியதைத் தந்துன் உழைப்பையள்ளித் தின்பவரை
மிஞ்சவும்ஓர் நாள்வரும் வாய்ப்பு


684)
துச்சமென்று யாரையும் தூற்றாதே; யார்க்குமுண்டு
உச்சமொன்றை வந்தடையும் வாய்ப்பு


685)
நல்லதென நாம்நினைக்கும் ஒன்று பிறர்கண்ணுக்கு
அல்லதென வாகஉண்டாம் வாய்ப்பு

2 comments:

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' said...

வாழ்த்துகிறேன்! 1330 ஐயை ஒரே கற்றையாகக் கிடைத்தால் மகிழ்வேன்!

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' said...

வாழ்த்துகிறேன்! 1330 ஐயை ஒரே கற்றையாகக் கிடைத்தால் மகிழ்வேன்!