இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 23, 2016

புத்தகமே புத்தகம் !


சிறப்பு : இன்று புத்தகதினம் !

மேலும் ஒரு சிறப்பு(எனக்கு) : ஐயனோடு சேர்ந்து ஐயனின் இலக்கை(1330) ஒருமுறை முடித்தபின்னர்... என்வழிலில் என்குரலை .. என்குறளால் ..ஐயனில் பாதியை மீண்டும் ஒருமுறைத் (665) தொட்டிருக்கிறேன் என்பதில் பெருமைதான் (எனக்கு)661)
நூல்பிடித்துச் சீரான பாதையில்உன் வாழ்வை
வழிநடத்தும் நீபடிக்கும் நூல்


662)
நூலைப்போல் சேலைஆம்; இன்றுநீ தேரும்நூல்
நாளைவழி காட்டும் உனக்கு


663)
புள்ளியில் தான்தொடங்கும் நேர்க்கோடு; பள்ளியால்
தானமையும் நேர்வழி வாழ்வு


664)
முன்னுள்ளோர் சொல்தவிர்த்து முன்னோரின் சொல்உயர்த்து;
தன்னால் சிறக்கும்உன் வாழ்வு


665)
பழம்பெரும் சொற்பொருளைப் புத்திக்குள் ஏற்று;
பலம்பெறும் இவ்வுலக வாழ்வு


No comments: