இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 26, 2016

நபி மொழி - 2 ..... தொழுகை ..!


671)
வலுவாய் உயர்வான் ஒருவன்; தொழுகையை
நோக்கி நகரும் பொழுது
.......................புகாரி

672)
பிறர்தொழ, முன்வந்து இடம்தர, யாரும்
சுருங்கத் தொழுவதும் நன்று
...................புகாரி 90

673)
உரிய பொழுதில் இறையைத் தொழுவது
உயரிய நற்செயல் ஆம்
........................புகாரி 527

674)
குறிகேட்டாய் என்றால் குறைக்கப் படும்;நாற்
பதுநாள் தொழுத கணக்கு
.........................முஸ்லிம் 4488


675)
விருப்பத் தொழுகையை வீட்டில் செலுத்து;
கடமைத் தொழுகைத் தவிர்த்து
................இன்னுகுஸைமா 1143
(அல்லது)
கடமைத் தொழுகைக்குப் பள்ளி; விருப்பத்
தொழுகைக்கு வீடு சிறப்பு

5 comments:

syedabthayar721 said...

Veri Nice

M.Syed
Dubai

பானு said...

ஹதீஸ் எண் தொடர்பாக உதவி தேவைப்பட்டால் தெரிவியுங்கள்.

பானு said...

https://m.facebook.com/banu.enrenrum

துரை. ந. உ said...

வாழ்க சகோ.. நான் துரை .. நபி மொழிகளைக் குறளில் தர முயல்பவன் .. உங்கள் உதவி கண்டிப்பாக வேண்டும் ... குர் ஆன், புகாரி, முஸ்லீம் - ல் இருந்து 400 இறைமொழியைக் குறளாக அனத்திருக்கிறேன் .. சில மொழிகளின் எண்களை கவனக்குறைவாக குறிக்காமல் விட்டிருக்கிறேன் ... எனக்கு உங்கள் மெயில் ஐடியைத் தந்துதவுங்கள் .. அந்தக் குறள்களையும் , அறிவுரையையும் அனுப்பி வைக்கிறேன் ,,, எண் என்ன என்று குறித்துத் தாருங்கள் ... காத்திருக்கிறேன்

துரை. ந. உ said...

@ syedabthayar721 நன்றி ஐயா