இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 7, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என்குறள்கடவுள் வாழ்த்து :அறம்
201)
நேற்றாகி இன்றாகி என்றும்தான் என்றாகி
நிற்பானின் தாள்வணங்கிப் போற்று

202)
இடத்தைத் திறப்பார் வலத்தை அடைப்பார்;
தடத்தை அறிந்துகொள் நீ

203)
காட்டுவார் என்றெதிர் பார்த்தால் அதுஇயல்பு;
ஊட்டுவார் என்றிருந்தால் தீது

204)
எண்ணம் நிறைவேற வில்லை யெனில(து)
இறைவனின் எண்ணமென்று கொள்

205)
அர்ச்சனை இல்லாத ஆலயம் காட்டும்
பிரச்சனை இல்லா உலகு

No comments: