இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 15, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என் குறள்படி, அதுதான் படி :/பொருட்பால்
216)
வேதமோ வாதமோ எண்ணத்தைச் சேதமின்றி
சொல்லும் வழியைப் படி


217)
புனிதராய் மாற முயலா(து) உலகில்
மனிதராய் வாழப் படி


218)
காடுசொல்லும் வாழ்க்கை முறைபடி; வீட்டுக்குள்
வாழும் உணர்வைப் படி


219)
உழைப்பைச் சுரண்டும் பிழைப்பை, மிரட்டி
அழிக்கும் வழியைப் படி


220)
பெரியோரின் சொற்படி நன்குபடி; ஆகுமடி
சொர்க்கத்தின் வாசற் படி

No comments: