

வாழ்க உறவுகள்
எனது சகோதரர்கள் பாஸ் என்னும் பாலாஜி பாஸ்கரன் அவர்கள் தூண்டிவிட,ப்ரசாத் வேணுகோபால் தலையில் தட்டி தளைத் திருத்தம் சொல்ல
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...! என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் மாதம் விளையாட்டாக எழுதத் தொடங்கினேன் ...
இதோ ...இன்று நின்று திரும்பிப் பார்க்கிறேன்....10 மாதங்கள்..உங்களின் உற்சாக உந்துதலினால் ...200 குறள்கள் முடித்திருக்கிறேன்... :))
மாதம் 20 :)) (# இதில் எத்தனைதான் தேறும் என்பது வேறு கணக்கு )
”குறள் அமைப்பை ஒத்துத்தானே இருக்கிறது ?
ஏன் குறள் போல என்று ஐயத்தோடு தலைப்பு? மாற்றுங்கள்! ” - என்ற பெரியவர்களின் அறிவுரையின்படி தலைப்பை மாற்றி இருக்கிறேன் ..
( முதலில் என்மேல் எனக்கில்லாத் நம்பிக்கையின் வெளிப்பாடு அது ... யாராவது
‘என்னய்யா இது ?’ என்று கேட்டால் அந்த
‘போல’வைக் காட்டித் தப்பித்து கொள்ளலாம் என்ற திட்டத்தில் இருந்தேன் :இன்னும் பலருக்கு இந்த ஐயம் உள்ளது என்றே நினைக்கிறேன்.. கேட்காமல் இருக்கிறார்கள்..அவ்வளவுதான் : ))
தொடர்ந்து வழிகாட்டுங்கள் ... பயணிக்கக் காத்திருக்கிறேன்
இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..!