112)
நேர்நிலையில் சேர்த்தோரின் செல்வம்; நிலைத்தவர்
வாரிசுக்கும் நன்மை தருமென்றும் - பாரினில்
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து--------------(14)
[முதல்குறள் ஈற்று = தரும் ; ஆசு = என்றும்]
114)
நல்லார் நடுவிலார் என்பதை அவரவர்
மக்கள் குணமுணர்த் தும்பார் - தலைவர்
தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்-----------------(15)
[முதல்குறள் ஈற்று = தும் ; ஆசு = பார்]
Tweet | |||||
2 comments:
மிக அருமை...! இன்றுதான் உங்கள் பதிவுகளைக் கண்டேன்... அத்தனையும் முத்துகள்!!! நறுக்குகளையும்(haikoo) படித்தேன்... வாழ்த்துகள்...
அத்தனையும் அருமை.. வாழ்த்துகள் .!
Post a Comment