திருக்குறளுக்கு விளக்கவுரையை குறளிலேயே அமைக்கலாம் என்ற முயற்சி இது .
. நான் செய்யக்கூடியது , செய்யக் கூடாதது பற்றிய தங்களின் அறிவரைக்காக வேண்டி நிற்கிறேன்
இதனப் பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை அறியக் காத்திருக்கிறேன்.
அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து :
================================
01)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
விளக்கக் குறள் :
அ)
எழுத்துக்(கு) அகரம் ; அதுபோன்றே இப்பூ
வுலகுக்கு என்றும் இறை
ஆ)
எழுத்துக்கு மூலம் அகரம்; இறைவன்
உலகத்தில் வாழும் உயிர்க்கு
இ)
அகரமே மூலம் மொழிக்கு; இறைவன்
பகலவன்கீழ் வாழும் உயிர்க்கு
ஈ)
அகரம் மொழிக்கெல்லாம் மூலம்; பகலவன்கீழ்
வாழும் உயிர்க்கு அவன்
02)
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
விளக்கக் குறள் :
கற்றறிந்தோர்; ஆண்டவன்தாள் ஏற்காதோர்; எல்லாம்
அறிந்தும் அறியா தவர்
03)
மலர்மிசை ஏகியான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவா வார்
விளக்கக் குறள் :
மலர்மனம் வாழும்இறைத் தாளடி சேர்ந்தோர்
உலகில் நிலைத்துவாழ் வார்
04)
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
விளக்கக் குறள் :
பற்றற்ற ஆண்டவன் நற்பாதம் சேர்ந்தார்க்கு
முற்றும் இடையூறு இல்
05)
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
விளக்கக் குறள் :
அ)
பொருளாசை காரிருள் அண்டாது நற்கடவுள்
பொருள்தம்முள் ஏற்றார் இடம்
ஆ)
அறியாமை ஆசையும் அண்டாது; ஆண்டவனின்
அர்த்தம் புரிந்தோர் வசம்
06)
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
விளக்கக் குறள் :
ஐம்புலம் ஆட்கொண்ட ஆண்டவன் பாதைசெல்வோர்
என்றும் நிலைத்துவாழ் வார்
07)
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
விளக்கக் குறள் :
அ)
ஒப்பில்லா ஆண்டவன் தாள்சேர்ந்தார் அல்லாதோர்
துக்கம் களைதல் அரிது
ஆ)
தனக்கு இணையில்லா அவன்தாள்ப் பணியாதோர்
துன்பம் தவிர்த்தல் அரிது
08)
அறவழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறஆழி நீத்தல் அரிது
விளக்கக் குறள் :
அறக்கடவுள் தாள்சேரா(து); இப்பிறவி ஆழ்கடல்
சற்றும் கடத்தல் அரிது
09)
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
விளக்கக் குறள் :
இருந்தும் இயங்காப் புலமாம்; அவன்தாள்
விரும்பி வணங்காத் தலை
10)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
விளக்கக் குறள் :
பிறவிப் பெருங்கடல் நீந்திக் கடக்கார்
இறைவன் அடித்தொடரா தார்
Tweet | |||||
3 comments:
KNOWLEDGE
“Seek knowledge even as far as China.” – Saying of Prophet Muhammad (pbuh)
“If anyone travels on a road in search of knowledge, Allah will cause him to travel on one of the roads of Paradise.” -
Sunan of Abu Dawood, Hadith 1631
Knowledge does not die out save when it is concealed.
--- Holy Prophet
A man who holds a piece of knowledge without transmitting it others should take care of his life so that the knowledge may not perish with him.
--Holy Prophet.
Reading makes a full man ;conference a ready man;and writing a exact man.
--Bacon.
When you read classic,you do not see more in the book than you did before;you see more in you than there was before.
---Olifton.
Some books are to be tasted,others to be swallowed,and some few to be chewed and digested.
--Bacon.
SEEK KNOWLEDGE FROM CRADLE TO GRAVE.
அருமை . தொடரட்டும் உங்கள் பணி . நீங்கள் விட்டுச் செல்லும் வழி மக்களுக்குப் பயன்படட்டும்
அருமையான பணி, துரை. தொடர்ந்து எழுதுங்கள். மொத்தத் திருக்குறளுக்கும் இவ்வாறு உரை செய்த பின்னால் நூலாகவும் வெளியிடுங்கள்.
யாப்பிலக்கணத்தைச் சரிப்பார்த்து உதவும் விசைநெறி என்ற மென்பொருள் ஒன்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம். விரைவில் அதை வலையில் பதிவேற்றுவோம். அதைப் பயன்படுத்தி உங்கள் குறள்களை எளிதில் சரிபார்த்து விடலாம்.
Post a Comment