
அறி.. நீயாவாய் அரி :
176)
உதறிக் கழித்த பொழுது கதறி
அழுதாலும் மீளா(து) அறி
177)
மணக்கும் மலரைப் பறிக்கும்முன் முள்ளின்
குணத்தை முதலில் அறி
178)
தடுமாறும் போதெல்லாம் தோள்கொடுக்க உன்தடத்தில்
பாரியின்தேர் வாரா(து) அறி
179)
கொடுக்கும் குணத்தைக் கெடுப்போர் இடுப்பின்
உடுப்பை இழப்பார் அறி
180)
அச்சாணி இல்லாமல் சக்கரம் முச்சாணின்
முக்கையும் தாண்டா(து) அறி
Tweet | |||||
2 comments:
வாவ்வ்வ்வ்.... அறிகிறோம்...
அன்பின் நண்ப,காலத்திற்கேற்ற கருத்துக்களை ஈரடிகளில் சொல்லும் நும் திறம் வெல்க. கூட்டை விட்டு வெளியே வருக. நூல் ஆக்குக வரவேற்பு ஏராளமாய் இருக்கும். தவறில்லை. அச்சமும் வேண்டாம். நூலுக்குத் தலைப்பிட சொல்லியா தரவேண்டும்? செல்க, காண்க. தங்கள் குறளும், படமும், காத்திருக்கின்றதுhttp://rssairam.blogspot.in/2012/08/blog-post_29.html
வலைத் தளத்தில்! இலக்கியத்தில் எளிமையாக்கியது, நெல்லை மாவட்டமே. தூத்துக்குடி அதனுள் அடக்கம். நூல் வெளியீட்டுர்ஹ் தகவல்தான் நும் அடுத்த பதிவாக இருத்தல் வேண்டும். வாழ்த்துக்கள்.
Post a Comment