இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 31, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்அன்பே..அன்பே : / இன்பம்
266)
நானாக நீயானால் நீயாக நானாவேன்;
தானாகத் தேனாகும் வாழ்வு


267)
பூவுக்கு நாராக பூமிக்கு நீராக
ஆலுக்கு வேராக வா


268)
உயிரையும் கூறாய்ப் பிரித்து விடுவார்;
இயலுமா நம்உறவை கூறு


269)
சோர்வில் தலைசாய்த்தால் ஆகுமடி உன்மடி
சொர்க்கத்தின் வாசற் படி


270)
பக்கமில்லை என்றால்தான் என்னவாம்; என்மனப்
புத்தகத்தின் பக்கமெல்லாம் நீ

No comments: