இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

November 7, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-பொருள்படி:

271)

விவாதத்தை இன்முகத்தால் வெல்லும் விவேகம்
உனக்குண்டு; கண்டு படி

272)
முன்வந்து காத்திருக்கும் நல்வாய்ப்பை உன்வசம்
ஆக்கும் முறையைப் படி

273)
பிழைக்கவழி காட்டும் நிலைக்கவலி ஊட்டும்
உழைப்பே உயர்வின் படி

274)
சிறுமையைச் சேர்க்கவழி சொல்லும் பொறாமையைக்
கொல்லும் வழியைப் படி

275)
மலரா மலராய் மடிந்தென்ன லாபம்;
மலரும் வழியைப் படி

No comments: