இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 18, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்உலக நடப்பு : /பொருள்
256)
மொந்தையின் உள்இருந்தால் பாலேதான் என்றாலும்
கள்ளெனவேக் கொள்ளப் படும்


257)
தடையில்லாப் பாதையில்நீ தொட்டதெல்லாம் வெற்றியென்றால்
உன்தேர்வின் மேல்ஐயம் கொ
ள்

258)
மூடும் கதவைக் கவனிக்கும் கண்ணறியா(து)
ஆடித் திறக்கும் கதவு


259)
சிரம்தாழ்த்தி சிந்தனையால் நோக்குவது; வாழ்வின்
சிரமத்தைப் போக்கும் வழி


260)
கெடுவதுபோல் தோன்றிடினும் உச்சத்தைத் தொட்டுவிடும்;
விட்டுக் கொடுத்தவன் வாழ்வு

No comments: