இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 19, 2015

கற்றதும்...பெற்றதும்.... !


491)
பட்டம் அறிவைத் தருவதில்லை; பட்ட
பிறகே வருமாம் அது


492)
கற்றடையும் கல்விக்கும்; வாழ்நாளில் பெற்றடையும்
கல்விக்கும் இல்லை தொடர்பு493)
கற்றுவரும் பாடத்தைப் பற்றியிருந் தாலது
பெற்றுத் தரும்நற் சிறப்பு

494)
வாக்கியம் நன்றாய் வருவதைக் காட்டிலும்
வாக்கின் நயமே சிறப்பு

495)
எழுத்தில் பிழையிருந்தால் தட்டி; கருத்தில்
களையிருந்தால் கொட்டித் திருத்து

2 comments:

‘தளிர்’ சுரேஷ் said...

அருமையான புதுக்குறள்கள்! வாழ்த்துக்கள்!

ஊமைக்கனவுகள். said...

சிறகசைந்து வானம் செலுத்துகின்ற வெண்பாக்
குறளிசைக்க இல்லை குறை!

அனைத்து வெண்பாக்களும் அருமை ஐயா.

த ம 1