இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

February 27, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


உலகம் :
54)
ஞாலத்தில் எல்லாம் இழந்துவிட்ட பின்வரும்
ஞானத்தால் என்ன பயன்


55)
துதித்துத் தொடர்வோரைத் தூற்றல்; நிழலை
மிதித்து நடப்பதைப் போன்று

56)
பொய்வந்து சாட்சியாய் உண்மையைச் சொன்னாலும்
மெய்யென ஏற்கா(து) உலகு


57)
வேதங்கள் சொல்லாத பேதங்கள் கண்டுணர்ந்து
வாதங்கள் செய்வ(து) எதற்கு


58)
பாடுபட்டோர் வாழ்வுயரப் பாதையில்லை; பாரெல்லாம்
கேடுகெட்டோர் வாழ்வே சிறப்பு


59)
உயரத்தில் ஏற்றம் இருப்ப(து) இயல்பு;
உயிரிடத்தில் மாற்றமெல்லாம் ஏது

1 comment:

பனித்துளி சங்கர் said...

நல்ல முயற்சி . இந்த ககுறள்களுக்கு தெளிவுரையும் தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் .