இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 12, 2017

மரம்... தப்பினால் , மரணம் !

என்குறள் :
1041)
வீட்டிலுள்ள மாட்டிற்கும் முன்நாம்நம் நாட்டுக்குள்
காத்திருக்க வேண்டியது காடு


1042)
மழைப்பிச்சை வாங்கும் மரத்தை அழித்தால்
மடிப்பிச்சைத் தான்எடுப்பாய் ஆம்


1043)
கதவாய் மரத்தையெல்லாம் மாற்றிவிட்டு, காற்று
வரத்திறந்து வைப்போம் கதவு


1044)
ஆறா யிரம்தான் விலைபோகும் நூறா
யிரம்கரு தாங்கும் மரம்


1045)
லட்சம் நடுவதே லட்சியம் என்பது
அலட்சியமா கும்நட்ட பின்பு

4 comments:

ராஜி said...

கடைசி படம் மனம் கலங்க வைத்தது .

மாசிலா said...

குறள்கள் எல்லாம் அருமை.

#கதவாய் மரத்தையெல்லாம் மாற்றிவிட்டு, காற்று வரத்திறந்து வைப்போம் கதவு#
இது சிரிப்பை வர வைத்தது.

அது என்னங்க குறள்கள் பக்கத்தில் எண்கள்!

குறள்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி துரை.

துரை. ந. உ said...

@ராஜி

மிக நன்றி

துரை. ந. உ said...

@ மாசிலா

மிக நன்றி ... எண்கள்.. அது இதுவரையில் இந்த ’ப்ளாக்’கில் பதிந்துள்ள துரைக்குறள்களின் எண்ணிக்கை ஐயா