இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 24, 2017

துரோகம் ...! விரோதம் ...!!

911)
துரோகத்தால் வீழ்ந்தோரின் எண்ணிக்கை இன்று
விரோதத்தில் வீழ்ந்தோர்க்கும் மேல்


912)
பிறர்வாழ வேண்டுவோர் வீழ்ந்தால்; அவர்சரிவின்
பின்இருப்பார் வாழும் பிறர்


913)
விரோதியிடம் போய்த்தானாய் வீழ்ந்தாவது உந்தன்
துரோகியின்முன் வாழ்ந்து விடு


915)
விரோதம்தான் வீரனின் வாழ்விற்கு அழகு;
துரோகத்தால் சேரும் இழுக்கு


915)
விரோதியைக் கண்டால் பொருது; துரோகியைக்
கண்டால் விரைந்து விலகு

1 comment:

Swathi Swamy said...

ஆஹா...........! ஒரு கருத்துக்கு இத்தனை குறளா?? அற்புதம்..!! பாராட்டுகள்..!!