821)
வீட்டுக்குள் மெல்லவந்து சோற்றுக்குள் கால்நீட்டும்
பீட்டாவின் பொட்டியைக் கட்டு
822)
நாட்டை அபகரிக்க மாட்டைக் குறிவைத்தோர்
ஆட்டைக்கு வைப்போம்வா வேட்டு
823)
பேட்டாவைக் கூட்டினால் பீட்டாவின் பேட்டாவாய்க்
கூவிவரும் கூட்டத்தை ஓட்டு
824)
நாட்டை ஒழிக்கும் சதியின் முதல்படிதான்
மாட்டை அழிக்கும் விதி


825)
கதைமுடிக்கும் திட்டமிட்டு வந்தோர் திகைக்க
சதையாடும் என்பது உணர்த்து
826)
நம்நாட்டைக் காக்கும் முயற்சியை நம்வீட்டில்
நம்நாட்டு மாட்டில் தொடங்கு


827)
மாடென்ன செய்யுமெனக் கைவைத்து நாடொன்றாய்
ஆகவழி செய்தார்க்கு வாழ்த்து
828)
இவரெல்லாம் என்செய்வார் என்பவர் எண்ணம்
தவறென்று காட்டுவோம் வா
829)
சல்லிக்கட்டு ஏனென்று கொள்ளிவைக்க வந்தவரைச்
சல்லிசல்லி யாக்குவோம் வா

830)
வாடிவா சல்திறக்க வீடுவா சல்துறந்து
வாடிவா செல்வோம் விரைந்து
Tweet | |||||
2 comments:
ராகவா லோரன்ஸ் அவர்களைப் பாராட்டுவோம் - அவரது உதவியும்
ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவியதே!
ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவிய
தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.
நன்றி ஐயா
Post a Comment