இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 9, 2014

சில குறிப்புகள் உனக்கு


சில குறிப்புகள் உனக்கு / பொருள்

376)
இருகையும் சேர்ந்தே உழைத்தாலும் உண்ண
ஒருகைக்குத் தான்தருவார் வாய்ப்பு

377)
சுள்ளிவெட்டும் வேளையில் சொல்லிவிட்டுத் தான்குத்தும்
முள்ளென்று எதிர்பார்த்தால் தப்பு

378)
கண்ணொன்றில் நீர்வடிந்தால் இன்னொன்றும் சேர்ந்தழுமே
தன்னால் உணர்வதுவே நட்பு

379)
வணங்கிமுன் நிற்போரைக் காட்டிலும் இன்னும்
பணிவாய் வணங்கப் பழகு

380)
அகலக்கால் வைக்காமல் ஆழம் புதைத்தால்
அகலும்;கால் சூழும் இழுக்கு

1 comment:

Yarlpavanan Kasirajalingam said...

அன்புள்ள அறிஞரே! தங்களுக்கென வலைப்பதிவர் விருது பகிரப்பட்டுள்ளது. அதனைத் தங்கள் தளத்திலும் பதிந்து உதவுமாறு விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடுக.

சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா?
http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_16.html