இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label வெண்பா - விழித்தெழு. Show all posts
Showing posts with label வெண்பா - விழித்தெழு. Show all posts

October 8, 2009

ஒருவாய் சோறு ..!


தெருவுப் பகையெல்லாம் தீருவ தெப்போ;
திருவிழா வெல்லாம் தொடங்குவ தெப்போ;
ஒருவாய்க் கறிசோறுக்(கு) ஏங்கிக் குழந்தை
ஒருவருச மாய்க்காத் திருக்கு

யாருக்குச் சாதகம்?....


ஆறோடும் பாதையில்நீர் ஊறுமா என்றுநீ
ஆரூடம் பார்த்தே அறிவாயா - யாரிடமும்
ஜாதகம் பார்;தனது சன்மானம் கூட்டவே
சாதகமாய் சொல்வார் அவர் .

நீதான் அந்த .....


தீவிரவா தம்தடுத்துத் தீமைத் துடைக்கவே
தேவனை வேண்டித் துதிப்பது - தேவையா?
உன்னை அறிவாய்; உணருன் அரிதாரம்;
உன்னுள்ளே அந்தவதா ரம்

September 30, 2009

உனக்குள் ஒருவன்..!


தீவிரவா தத்தின் துளைக்குமந்த வேர்தனை
தீவிரமாய்த் தூரறுக்கும் வாய்ப்புக்கும் - தீயாய்
எரிக்கவும் காத்திருக்கி றானொருவன்; உன்னுள்
இருக்கும் அவனையு ணர்
[29-09-09]

தீவிர வாதத்தின் கூர்மிகுந்த வேர்தனை
தீவிரமாய்த் தேடித் தரைவீழ்த்த - தீயின்
தனலாக வாய்ப்புக்(கு) தவிக்கும் ஒருவன் ;
உனக்குள் அவனை உணர் ..
[04-10-09]

September 24, 2009

புகையேப் பகை


புண்பட்ட நெஞ்சைப் பதமாக்கிப் பண்படுத்தும்
எண்ணமில்லா(து) ’நண்பன்நான்’ என்பார் - மனதைப்
புகைவிட்டு ஆற்றெனப் பாழ்குழியில் வீழும்
வகை செய்வார் உணர் ..

திருத்தம் :ப்ரசாத்
புண்பட்ட நெஞ்சைப் பதமாக்கிப் பண்படுத்தும்
எண்ணமில்லா(து) ’நண்பன்நான்’ என்பார் - மனதைப்
புகைவிட்டு ஆற்றெனப் பாழ்குழியில் வீழும்
வகையதைச் செய்வார் உணர் ..

September 22, 2009

கண் தானம்


மண்ணில் பிறந்துபின் மண்ணுள் புதையுமுன்
கண்ணில்லா தோரிடத் தில்விதையுன் கண்ணையே;
வின்னவனே வந்துநின்று காத்திருப் பார்சேவிக்க
மண்ணில் உனக்கு முன்பு

எய்ட்ஸ்


மதிகெட்டுப் பாதையில் தேடிச் சுகித்தால்
விதிமுடிக்க வந்துசேரும் ஆழிநோய் - சதியவள்
பித்தாகி வீதியில் நின்றிட; நற்குடும்பம்
சித்தம் சிதறிப்போ கும்