இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label வெண்பா - குடும்பம். Show all posts
Showing posts with label வெண்பா - குடும்பம். Show all posts

July 16, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


என் உலகம் :
141)அப்பா :

சிந்தனையின் வித்தவர்; நீவாழ தன்னையே
விற்றவர்;உன் தந்தையைப் போற்று

142) அம்மா :
மடியில் வளர்த்தாள்; வடிவம் கொடுத்தாள்
விடியல் அவள்தான் உனக்கு

143)
உறியாய் தறியாய் திரியாய் இருப்பாள்
உயிரும் தருவாள் உனக்கு

144)
கொடியிலுயிர் தந்து மடியிலூண் தந்துன்
படியாய் இருப்பாள் பணிந்து

145) இரண்டாவது அம்மா :
நிலவுக்கும் உண்டாம்ஓர் நாள்ஓய்வு; நில்லாள்;
நிலவுக்கும் மேலாம் இவள்

October 8, 2009

வெளிச்சம் தேடும் விளக்கு

(09.05.11ல் திருத்தியது )

தண்ணியப் போட்டுவந்து மூஞ்சியிலக் குத்துறான்;
திண்ணையில கண்சொக்கிக் கக்குறான் - என்னசெய்ய?
சுள்ளுன்னு கஞ்சிவச்சு சூடாக் கொடுத்திட்டு
சுள்ளிப் பொறுக்கப்போ ணும்

இது ஆரம்ப நிலை வடிவம் :

தண்ணியப் போட்டுவந்து தூக்கிப்போட்(டு) சாத்தீட்டு
கண்தெரியா(து) கீழேக் கிடக்கிறான் - என்னசெய்ய?
சுள்ளுன்னு கஞ்சிவச்சு சூடாக் கொடுத்திட்டு
சுள்ளிப்பொ றுக்கப்போ ணும்

September 29, 2009

வழுக்கியது பசியிலா? பாசத்திலா ?


வழுக்கியது தொண்டைக்குள் வாயினில் வைத்த
புழுங்கலரி சிச்சாதம்; பயலறிவேன் ஏனிதென்றே;
சொல்லிச்சேர்த் தந்தநெய்யா?; சொல்லாமல் அம்மாவின்
அள்ளியே வார்த்தந்தக் கை

September 23, 2009

வீட்டில் பாடம்


உச்சப் பெருமூச்சோ டென்வாசல் முற்றத்தில்
பிச்சைக்கு நிற்குதொரு பச்சைக் குழந்தை;
விரட்டிக் கதவடைத்தேன்; பின்னால்க் குழம்பி
மிரண்டென் இளைய மகள்


[அமைப்பு : இன்னிசை/இருவிகற்பம்]

September 22, 2009

ஏக்கம்


குஞ்சைச் சிறகுக்குள் பொத்திய வான்கோழி
பிஞ்சுவாய்க்குள் கெஞ்சியூட்டும் தேன்சிட்டு - கொஞ்சியே
ஊட்டி விளையாடும் வீதிநாய்; ஏங்கியென்
வீட்டைத் தேடுதே மனசு

மாமியாரான மருமகள்


மருமகளாய் வந்துயே மாந்தமா மிக்கேன்
மருமகளின் எண்ணம் எதுவும் புரியவில்லை;
நம்பியே வந்தோரின் உள்ளம் மிதிப்பவர்
நிம்மதி யும்நிலைக் கா(து)

மருமகளாய் ஏமாந்த மாமிக்கு வந்த
மருமகளின் ஏக்கம் அணைக்கத் தெரியவில்லை;
பட்டுணர்ந்த வாழ்க்கையின் முக்கியப் பாடமது
பட்டென்(று) மறந்தது ஏன்?
18-10-09