உயிர்துறந்த பாவியின் உடலுக்கு முன்னால் உயில்திறக்கும் சண்டையில் உற்றோர் - உயிலெங்கும் ஓடுமோ?; மண்ணுள் ஒளிந்த(து) குடும்பத்தின் கூடி வளர்க்கும் குணம்! ..
செத்தவரைச் சுற்றிலும் சத்தமாய் உற்றோர்கள் சொத்துக்குச் சுற்றும் சிலம்பம்பார் - வைத்திருக்கும் சோத்துக்குக் காக்கைகள் சண்டைபார்; சாய்ந்தது சேர்த்து வளரும் குணம்