இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

February 27, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


உலகம் :
54)
ஞாலத்தில் எல்லாம் இழந்துவிட்ட பின்வரும்
ஞானத்தால் என்ன பயன்


55)
துதித்துத் தொடர்வோரைத் தூற்றல்; நிழலை
மிதித்து நடப்பதைப் போன்று

56)
பொய்வந்து சாட்சியாய் உண்மையைச் சொன்னாலும்
மெய்யென ஏற்கா(து) உலகு


57)
வேதங்கள் சொல்லாத பேதங்கள் கண்டுணர்ந்து
வாதங்கள் செய்வ(து) எதற்கு


58)
பாடுபட்டோர் வாழ்வுயரப் பாதையில்லை; பாரெல்லாம்
கேடுகெட்டோர் வாழ்வே சிறப்பு


59)
உயரத்தில் ஏற்றம் இருப்ப(து) இயல்பு;
உயிரிடத்தில் மாற்றமெல்லாம் ஏது

February 13, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

நாட்டு நடப்பு :
49)
தாழ விடாமல்தன் தோள்கொடுப்பான் தோழன்;உன்
தோள்தாழத் தொங்குபவன் வேறு

50)
நெல்லையை தில்லையை சென்னையையும் தாண்டுநீ
எல்லையெல்லாம் இல்லை உனக்கு

51)
முயல்பவரை முன்மொழியும் வெற்றி; தயங்குபவர்
பின்னால் ஒளியும் அது

52)
ஈசலுக்கும் கூட இணையில்லார் காட்டுவார்
ஈசனுக்கும் மேல்தம்மை இங்கு

53)
தேவையெல்லாம் தத்தளிப்போர்க்(கு) ஓர்துடுப்பு; வேண்டாம்
குளிர்காய அங்கோர் அடுப்பு

February 6, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

விலங்கும் விளக்கும் :

45)
படம்பார்க்கப் பேராவல் கொண்டேன்; படர்ந்ததென்
தோள்மேல் கருநாகம் ஒன்று


46)
ஏய்த்திழுக்கும் எண்ணத்தில் இன்சொல் வலைவீசும்
மேயவந்த மாயமான் கன்று


47)
தட்டில் அதற்கும்தான் உண்டே சரிஉரிமை;
விட்டிலுக்கேன் இல்லை பகல்


48)
சாயும் பழத்தோட்டக் காவல் விலகினால்
பாயும் பசித்த கிளி

February 1, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


எல்லாம் அவள் :

40)
படித்தேன் அவளின் மடலை; அடைந்தேன்

படித்தேன் குடித்த உணர்வு41)
நெஞ்சமெங்கோ பெண்பின் அலைந்திருக்க; கொல்லுமிங்கே

கொஞ்சமே மீந்த நினைவு


42)
பொழுதெல்லாம் என்னுள் விழுதாகிப் பூப்பாள்;

பழுதாகிப் போகும் மனது43)
குளித்தவளைக் கண்டேன்; குழித்தவளை ஆனேன்;

வளியெல்லாம் எந்தனிசைப் பாட்டு


44)
மொய்க்கும்உன் கண்ணுக்(கு) இணையில்லை; இவ்வுலகை

மொய்யெழுதி வைப்பேன் அதற்
கு